• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த தெரு நாய் பத்திரமாக உயிருடன் மீட்பு..,

ByKalamegam Viswanathan

Oct 7, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் குடிநீர் தொட்டி பழுதடைந்து பராமரிக்கப்படாத நிலையில் இருந்த குடிநீர் கிணற்றில் தெரு நாய் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து உடன் சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவல பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் வீட்டு மேலே கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நாயை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பகுதி பொதுமக்கள் தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.