• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு..,

ByK Kaliraj

Oct 6, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஆணையாளர் மகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் சீனிவாசன் உதவி திட்ட அலுவலர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கிராமத்தில் உள்ள தேவைகளை அறிந்து மக்களே கேட்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்டத்தின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மகளிர் குழு சார்பில் விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்றுநர் கவிதா செய்திருந்தார்.