மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் என்ற இரு இளைஞர்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.,

இதில் முழு போதையில் இருந்த இருவரில் ராமச்சந்திரன் என்பவர், நண்பனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சொல்லி மருத்துவ பணியாளர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.,

இது தகவலறிந்து விரைந்து வந்த போலீசாருடனும் வாக்குவாததில் ஈடுபட்டு மருத்துவ உபகரணங்களையும் உடைக்க முற்பட்டதுடன், எந்த சிறையில் போடுவீங்க, எல்லா சிறையும் பாத்துட்டு தான் வந்திருக்கோம், பாத்துக்கலாம் என அடாவடி செய்தது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,
இருவருக்குமே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போதையில் மருத்துவமனை பணியாளர்களை தாக்கி அட்டாகாசம் செய்த இளைஞர்கள் குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,




