• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கூடலழகர் பெருமாள் கோயில் சுவற்றுகளை சுற்றி குப்பைகள் கிடப்பதை அகற்றகோரி புகார் அறிக்கை!

ByKalamegam Viswanathan

Oct 5, 2026

மதுரை மாநகர் 79-வது வார்டில் உள்ள அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமாகும்.

இத்திருக்கோயில் சுற்றியுள்ள மேலவடம் போக்கி தெரு,பெருமாள் கோயில் தெற்கு மாடவீதி என திருக்கோயில் சுற்று சுவற்றை சுற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் கோயில் என்று பாராமல் கொப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கி வருகிறார்கள். முகம் சுழிக்கும் வகையில் குப்பை கிடங்காக கிடப்பதால் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனவேதனையும் அடைகிறார்கள்.

திருக்கோயிலை சுற்று சுவரை சுற்று குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும்,குப்பைகளை அகற்ற கோரியும் பலமுறை பக்தர்கள் புகார் அளித்தும் பெயர் அளவிற்கு தான் குப்பை அகற்றினார்களே தவிர முழுமையாக குப்பைகளை அகற்றுவதற்கும்,குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரையில் இந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பக்தர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.

கோயில் மாநகரம் தூய்மையான மாநகரம் என்று அன்று பெயர் பெற்ற மதுரை மாநகரம் திருக்கோயிலை சுற்றி குப்பை கூடாரம் மாநகரமான மாறி கிடக்கும் திருக்கோயிலுக்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள எம்பி.சு.வெங்கடேசனுக்கு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்பதற்கும்,அதேபோல் மத்தியதொகுதி எம்எல்ஏ முஸ்தபாவுக்கு சனாதன ஒழிப்பதற்காகவும் போராடுகிறார்களே தவிர திருக்கோயிலை சுற்றி குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கும், அகற்றுவதற்கும்,ஒழிப்பதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மக்கள் பிரதிநிதிகளான சு.வெங்கடேசனையும், முஸ்தபாவையும் இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மதுரை மாநகரத்தை குப்பை மாநகரமாக்கும் மக்கள் பிரதிநிதிக்கே தகுதியில்லாத சு.வெங்கடேசனும்,முஸ்தபாவும் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது.

பள்ளிவாசல்,சர்ச் போன்ற வழிபாட்டு தளங்களை சுற்றி குப்பை கொட்ட விடாமலும்,குப்பை கிடங்குகளாக சேகரிக்க விடாமலும் உடனடி நடவடிக்கை எடுத்து சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துள்ள இந்த மாநகராட்சி நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலை சுற்றி மட்டும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்காமல் ஒருதலைபட்சமாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவது போல் சந்தேகம் எழுகிறது.

திருக்கோயிலில் பணிபுரியும் அதிகாரிகள் கோயிலுக்குள் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. பக்தர்கள் வந்து செல்லும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தமாக வைத்து கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே மேற்கண்ட திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார சீர்க்கேட்டை உண்டாக்கும் விதமாகவும்,திருக்கோயிலின் புனிதத்தை சீர்குழைக்கும் விதமாகவும் திருக்கோவிலை சுவற்றை சுற்றி குப்பை கூடங்களாக கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும்,திருக்கோயிலை சுற்றி குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், அதனை மீறி வேண்டுமென்றே திட்டமிட்டு குப்பை கொட்டி திருக்கோயிலை அசுத்தப்படுத்த நினைப்பவர்கள் மீதும்,கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து திருக்கோயிலை சுற்றி சுத்தமாகவும், தூய்மையாகவும் வைக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் திருக்கோயிலின் சுகாதாரப் பாதுகாப்பு நலன்கருதி மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு இந்துமக்கள்கட்சி சார்பில் இந்த அறிக்கையின் மூலமாக புகார் சமர்பிக்கப்படுகிறது.

இல்லையெனில் திருக்கோயிலின் தூய்மையையும் சுகாதாரத்தையும் பாதுகாக்க கோரியும்,மாநகராட்சி நிர்வாகத்தையும், மதுரை எம்பி,மதுரை மத்திய் தொகுதி எம்எல்ஏவை கண்டித்தும் திருக்கோயில் முன்பாக விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.