பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் முதல்முறையாக துவங்கபட்டது டிஎன்.ஹேப்பி கிட்ஸ் டாட் இன் எனும் டே கேர் மற்றும் டியூசன் சென்ட்டர். இங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை குழந்தைகளின் பெற்றோர்கள் பார்த்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 13 கிளைகளுடன் இயங்கும் இந்த பள்ளியின் 14 வது கிளை கோவை கவுண்டம் பாளையம் அடுத்த பிஎன்டி காலனி பகுதியில் திறக்க பட்டுள்ளது.
இது குறித்து இந்த கிளையின் உரிமையாளர் அருண் சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது..
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் உருவாக்க பட்டதுதான் இந்த பள்ளி. இங்கு சேர்க்கபடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இங்குள்ள சிசிடிவி கேமரா அக்ஸஸ்களை வழங்கி விடுகின்றோம். இதன் மூலமாக உங்களது குழந்தை எவ்வாறு பாடம் படிக்கிறது, பள்ளியில் குழந்தைகளின் செயல்பாடுகள் என்னென்ன என வீட்டில் இருந்தே பெற்றோர்கள் கண்காணித்து கொள்ளலாம் என்ற திட்டத்தை முதல்முறையாக தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்தோம்.

இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 13 கிளைகளை துவங்கி விட்டோம் இது எங்களது 14வது கிளை என்று தெரிவித்தார். மேலும் உலக தரம் வாய்ந்த, ஐஐடியில் பயின்ற திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு, சிலபஸ்களை உருவாக்கி, அதனை குழந்தைகளுக்கு கற்று தருவதாகவும், 5 வயது குழந்தைகளுக்கு என்னென்ன கற்று தர வேண்டுமோ அவற்றை எல்லாம் இங்கு கற்று தருவதாக கூறினார். தற்போது மாறி வரும் உலகில் ஏஐ ரோபோவை கொண்டு கற்றல் பயிற்சிகளை வழங்கி வருவதாக கூறிய அவர், குறைந்த விலையில் தரமான கல்வியை வழங்குவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும் சமூதாயந்தில் மிகவும் பின் தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வியும் இங்கு வழங்க பட்டு வருகிறது. மேலும் ஒற்றை பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்தவர்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் கார் ஓட்டுநர்கள், பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 50 சதவிகித தள்ளுபடியும் வழங்கி வருகின்றதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




