• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி..,

BySeenu

Oct 2, 2026

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், கல்லூரிகளுக்கு
இடையிலான கலாச்சார விழாவான “கரிஷ்மா” நடைபெற்றது.

இந்த விழாவானது இன்று துவங்கியது. தலைவர் Dr. (Mrs.) N. யசோதாதேவி வரவேற்புரையாற்றுவார்.விழாவின் சிறப்பு பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலாளர் மற்றும் துணைத் மணிக்கு இறைவணக்கத்துடன் தொடங்கும்.
விருந்தினராக பிரபல பின்னணிப் பாடகர் திரு. விக்னேஷ் ராஜு கலந்து கொண்டு
விழாவைச் சிறப்பிக்க உள்ளார்.

கல்லூரிகளுக்கு இடையிலான இக்கலாச்சார விழா, மாணவியர்களின் கலைத்திறன்,
படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற
உள்ளது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று
தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு
கலை நிகழ்வுகள் மூலம் மாணவர்களின் ஆர்வமும் திறமையும்
வெளிக்கொணரப்படும்.

விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. விக்னேஷ் ராஜு, மாணவியர்களை ஊக்குவிக்கும்
வகையில் கலை, இசை மற்றும் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதன்
முக்கியத்துவம் குறித்து உரையாற்ற உள்ளார்.மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும்
படைப்பாற்றலை அடையாளம் கண்டு, அதனை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்த
வேண்டும் என்பதையும் வலியுறுத்த உள்ளார்.தொடர்ந்து, மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் மூலம் மாணவர்களுக்கு தங்களது
திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், புதிய அனுபவங்களைப் பெறுவதற்கும்
வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

மாலை 4.30 மணிக்கு கரிஷ்மா விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் Dr. P.B. ஹாரத்தி
வரவேற்புரையாற்ற உள்ளார்.நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல நடன
இயக்குநர் திரு. சபரிஷ் கலந்து கொண்டு மாணவியர்களை ஊக்குவிக்க உள்ளார்.நிறைவு நிகழ்வில் நாள் முழுவதும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும்
போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவியர்களின் திறமைகள் பாராட்டப்பட்டு,
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தொடர்ந்து, மாணவர் தலைவர் செல்வி. ஜெஸ்ஸிகா வர்ஷினி நன்றியுரை வழங்க
உள்ளார். மாணவர்களின் கலைத்திறன், மற்றும் படைப்பாற்றல் தன்னம்பிக்கையை
வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான கலாச்சார விழாவாக கரிஷ்மா அமைய உள்ளது.