கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அவருக்கு, மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில், கோவை விமான நிலையத்தில் இருந்து, அவினாசி சாலை வரை வழிநெடுங்கிலும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு, கழக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ்செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக்கோவில. சாமிநாதன், மேயர் ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கழக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், துணைமேயர் வெற்றிச்செல்வன், கழக சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர்.

கோவை விமானநிலையத்தில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர், இன்று இரவு ஒட்டன்சத்திரத்தில் ஓய்வெடுக்க உள்ளார். இதைத்தொடர்ந்து நாளைக்காலை தாராபுரத்தில் ரோடு ஷோவில் பங்கேற்கின்றார். நாளை மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து நாளை இரவு விமானம் மூலம் மீண்டும் அவர் சென்னை திரும்ப உள்ளார்.




