மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ,திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் கூட்டம் ,கூட்டமாக வந்த நிலையில், நோயாளிகள் தங்களுடைய பதிவு சீட்டை பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
பதிவு சீட்டு பதிவதற்கு இணையதள சேவை திடீர் திடீரென முடக்கப்படுவதால், அப்பணிகள் முழுவதும் பாதிப்படைவதால் நோயாளிகள் இரண்டு மணி நேர அளவில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாலும், மேலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைகள் அளிப்பதில் கடும் தாமதம் நிலை வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக அரசு இதனை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.