• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனையாக அவேரா இதய மருத்துவமனை..,

BySeenu

Oct 1, 2026

கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது..

இதில் இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜ்பால் மற்றும் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர்..

இதயத்திற்காக, இதயத்திலிருந்து” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இதய நோய் நிபுணத்துவம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் அவேரா இதய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

அவேரா இதய மருத்துவமனை ஒரு வலுவான புவியியல் நோக்கத்துடனும் நிறுவப்பட்டுள்ளதாகவும், கோவையில் பல முக்கிய உயர்நிலை மருத்துவமனைகள் நகரின் தெற்குப் பகுதிகளில் குவிந்துள்ள நிலையில், வடக்கு கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி , நீலகிரி மாவட்டம் வசிப்பவர்களுக்கு மேம்பட்ட இதயப் பராமரிப்புக்கான அணுகலை வலுப்படுத்துவதை அவேரா நோக்கமாகக் கொண்டுள்ளது.

100 படுக்கைகள் கொண்ட அவேரா மருத்துவமனை, இதய மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன் உள்கட்டமைப்பில் இரண்டு பிலிப்ஸ் அஸூரியன் 7-சீரிஸ் கேத் லேப்கள், இரண்டு உலகத் தரம் வாய்ந்த கெட்டிங்கே மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட இதயப் பராமரிப்புப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இதய -மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிந்தையப் பிரிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த படமெடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய பிலிப்ஸ் இன்சிசிவ் கார்டியாக் சிடி ஆகியவை அடங்கும்.

இந்த மருத்துவமனை, இதயவியல், இதய-மார்பக அறுவை சிகிச்சை, மயக்கவியல், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர மருத்துவப் பிரிவு, கதிரியக்கவியல் மற்றும் நுரையீரல் மருத்துவம் ஆகிய துறைகளில் சேவைகளை வழங்கும்.

இவற்றுக்கு சிறுநீரகவியல், நரம்பியல், நாளமில்லாச் சுரப்பியல், பொது மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் உள்ளிட்ட கூடுதல் சிறப்புத் துறைகளும் ஆதரவளிக்கும். மேலும், 24 மணி நேரம் செயல்படக்கூடிய மருந்தகச் சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் மேம்பட்ட இதய-மார்பக அறுவை சிகிச்சை ஆதரவு ஆகியவற்றையும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்..