விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மழைவேண்டி வருணபூஜை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சிவகாமிஅம்பாள் உடனுறை வைத்யநாதஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றது. நகரில் மழை பொழிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகர் செழிக்க வேண்டி வருண பூஜை நடைபெற்றது. பூஜையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் கோ.தேவி மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.





