• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சாலையில் கற்கள் பரத்தல் – பொதுமக்கள் குற்றச்சாட்டு

ByP.Thangapandi

Sep 30, 2026

உசிலம்பட்டி அருகே சல்லி கற்கள் பரத்தல் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் விரைந்து தார்சாலை அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மமுத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு சுமார் 4 மாதங்களுக்கு மேலாக தார் சாலை அமைப்பதற்கு ரெங்கசாமிபட்டி விலக்கிலிருந்து அம்மமுத்தம்பட்டி கிராமம் வரை 2 கிலோமீட்டர் சல்லி கற்கள் பரத்தல் செய்யப்பட்டு தார் சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சல்லி கற்கள் பெயர்ந்து சிதறிக்கிடக்கின்றன.

மேலும் பொதுமக்கள், வயதானவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் வரை சாலையில் சென்று வர முடியவில்லை எனவும், அவசரத் தேவைகளுக்காக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, சாலையிலிருந்து கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விரைந்து இந்த கிராமத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் எனவும், பேருந்து சேவையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.