• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

BySeenu

Sep 27, 2026

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த அமைச்சர்களாலும் முதலமைச்சராலும் தீர்மானமான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் மக்களுக்கான திட்டங்கள், மக்களுக்கான குறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து யாரும் பேசவில்லை என்றும், அவர்களுடைய சொந்த பிரச்சினைகளைத்தான் பேசி வருவதாகவும் தெரிவித்தார். திமுகவினர் முதல்வரை தாக்கிப் பேசுகிறார்கள், முதல்வர் திமுகவை தாக்கிப் பேசுகிறார். ஆனால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மட்டும்தான் மக்களுக்கான திட்டங்களையும், நாட்டுக்கான திட்டங்களையும் பற்றி பேசுகிறார் என்று தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், RTI சட்டம் என்பது ஒரு நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக மக்களின் அடிப்படை சுதந்திரமாக கருதப்பட்டது என்றும், இவர்கள் ஒரு அரசாணையை போடுவது, அதனை மீண்டும் வாபஸ் வாங்குவது என்பதெல்லாம் கண்டிக்கத்தக்கது.

இது அவர்களது நிர்வாகத் திறமையை வெளிக்காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
நாளைய பாரத பிரதமர் ஜோசப் விஜய் என்று சூலூர் தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டர் ஒட்டி இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நீங்கள் கூறியதால் ஜோசப் விஜய் என்றே நானும் குறிப்பிடுகிறேன் என்றும், திரு. ஜோசப் அவர்களுக்கு சுவர் போஸ்டர் ஒட்டுவதில் பிரச்சினை இல்லை, அதனை காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்திய தேசம் தற்போது உலக அளவில் இருக்கிறது என்றால், அதற்கு தனித்திறமை, முயற்சி, ஈடுபாடு எல்லாம் வேண்டும். அப்படியுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் என்று புகழ்ந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக இருந்தாலும் சரி, ரஷ்ய அதிபர் புதின் ஆக இருந்தாலும் சரி, இருவரையும் மகாபலிபுரம் கடற்கரைக்கு அழைத்து வரக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், இதற்கு முன்பு இருந்தவர்கள் எல்லாம் அதனை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தெரிந்தோ தெரியாமலோ 107 சீட்டுகளில் ஜெயித்துள்ளார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தினரை குறிப்பிட்டு பேசிய அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது எல்லாம் தவறு கிடையாது. அந்தத் தகுதியும் திறமையும் அவர்களுக்கு உள்ளதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள்? தற்போது வரை ரூ.2,500 வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாத்துள்ளார்களா? இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களே உள்ளார்கள். 200-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளது.

கஞ்சா பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குடிசைக் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.தேர்தல் ஆணையத்தின் மீது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு, தேர்தல் ஆணையம் குறித்து கரப்பான் பூச்சி பார்ட்டி மட்டும் அல்ல, நகைச்சுவை என்றால் ராகுல் காந்தியும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் என்றும், தேர்தல் ஆணையம் நேற்று கூட ஒரு கூட்டத்தைக் கூட்டி SIR பற்றி தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி அதனையும் கேலி, கிண்டல் செய்ததாகவும், கரப்பான் பூச்சி அமைப்பு கூட நேற்று வந்தவர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர், பிரதமராக இருந்தவரின் மகன், உச்சநீதிமன்றம் சொல்லிய கருத்தையே கேலி, கிண்டல் செய்கிறார் என்றும் விமர்சித்தார்.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சுதந்திரம். தேர்தல் ஆணையம் கூறியதை உச்சநீதிமன்றமே வரவேற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆறு கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் முன்பு இருந்தனர். SIR-க்குப் பிறகு 5 கோடியே 70 லட்சம் பேர் இருந்தார்கள். கிட்டத்தட்ட 11 சதவீதம் குறைந்துள்ளது. அதை எப்படி என்றால், ஒருவர் இறந்திருக்கலாம் அல்லது குடிபெயர்ந்து சென்றிருக்கலாம் என்று விளக்கம் அளித்தார்.மேலும், ‘கோவில்’ திரைப்படத்தில் வடிவேலுவை குறிப்பிடுவது போல் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி என்று விமர்சித்தார்.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் நிச்சயமாக எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

திமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்பது போல் முதல்வர் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, டெல்லியில் எங்கு திமுக உள்ளது? ஆனால், பாஜக இந்தியா முழுவதும் உள்ளது. இரண்டையும் சேர்த்து சொன்னால் எங்கு முரண்பட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

நாங்கள் எப்போதும் எதிரானவர்கள் தான். எப்போதும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. 1999 தேர்தலில் மட்டும் திமுக-பாஜக கூட்டணி இருந்தது. அதன் பிறகு எப்போதும் அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தது. தற்போது நம்முடைய முதல்வர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளார். எனவே, அவர்தான் முரண்பட்டு இருக்கிறாரே தவிர, எங்களுக்குள் எதுவும் இல்லை. ஒரு விஷயத்தைத் தெரிந்து தெளிவாகப் பேச வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றம் சென்றாலும் சினிமா வசனம் போன்று முதல்வர் பேசுகிறார் என்றும், முதல்வருக்கு சாந்தமாக பேசத் தெரிய வேண்டும். பதவிக்கு வந்த பிறகாவது சாந்தமாக பேச வேண்டும் என்றும் கூறினார். இப்படியெல்லாம் பேசக்கூடிய முதலமைச்சர் தமிழகத்தை என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. தமிழகம் எந்த நிலைமைக்குச் செல்லப் போகிறது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக விமான நிலைய அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக பாஜக மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.அதே சமயம், தமிழக முதலமைச்சர் பரந்தூர் விமான நிலையம் கூடாது என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு காலத்தில் பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து சென்னை வந்து தான் லண்டன் போன்ற நகரங்களுக்கு விமானம் ஏறுவார்கள்.

ஆனால், தற்போது சந்திரபாபு நாயுடு குப்பத்தில் அந்த ஏற்பாட்டை செய்துள்ளார். எனவே, பெரிய விமானங்கள் அனைத்தும் அங்கு சென்று விடும். இதனால் தமிழகம் 10, 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என்றார்.இவர்கள் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால், எவ்வளவு குறைத்தார்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்பதற்கும் தற்போது வழியில்லை என்றும் கூறினார். இவர்கள் முதலில் நாட்டிற்கு செய்ய வேண்டிய நன்மை என்னவென்றால், கஞ்சா, போதைப் பொருட்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜெம் வீரமணி வழக்கில் எதிர்க்கட்சிகள் வாயே திறப்பதில்லை என்ற ஒரு விமர்சனம் எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, அந்த விவகாரத்தில் முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழக பாஜக தான் என்றும், இது சம்பந்தமாக டெல்லியிலும் பேட்டி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அவர்கள் காலதாமதம் செய்து விடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இரண்டு வருடத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ஆட்சிக்கு எவ்வாறு வந்தார்கள் என்பதைப் பற்றி சொல்லக்கூடாது. எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்று கூறினார்.புதிய தலைமைச் செயலகம் தொடர்பான கேள்விக்கு, தலைமைச் செயலகம் என்பது வேண்டும். ஆனால், இந்த காலகட்டத்தில் வேண்டுமா, வேண்டாமா என்பதை முதல்வர் ஏன் ஆலோசிக்கவில்லை? தலைமைச் செயலகம் குறித்து அறிவிப்பு செய்யும்போது, ஒரு இடத்தில் என்னென்னவெல்லாம் இருக்கிறது, எவ்வளவு குடிமக்கள் இருக்கிறார்கள், அந்த இடமெல்லாம் சாத்தியப்படுமா என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.
அது குறித்து எந்த ஒரு வரைபடமும் இல்லை, எஸ்டிமேட்டும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது, எடுத்த எடுப்பிலேயே சினிமா வசனம் போல் கூறினால், அதில் அவர்களுக்கு புரிதல் உள்ளதா, திட்டமிடுதல் உள்ளதா என்று தெரியவில்லை என்று விமர்சித்தார்.
தன்னைப் பொறுத்தவரை, தற்போது உள்ள தலைமைச் செயலகமே போதும் என்று கூறிச் சென்றார்.