• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இன்று குரூப்-1 தேர்வு..,

BySeenu

Sep 27, 2026

குரூப் 1 தேர்வு கோவையில் 17 மையங்களில் நடைபெறுகிறது 11 ஆயிரம் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இன்றைய தினம் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 17 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சுமார் 11,000க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். அனைத்து மையங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் அவர்களது உடமைகளை காண்பித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தேவர்கள் அவர்களது உடமைகளை வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 9:30 மணிக்கு தேர்வு துவங்குகிறது.