மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பாண்டி செயலாளர் பாலகுரு முன்னில வகித்தனர். காடுபட்டி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார் நிர்வாகிகள் ஆறுமுகம் கண்ணன் திருப்பதி காவலர்கள் செல்லப்பாண்டி தனபாண்டி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





