• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் செப்.27-ல் வேர்ல்டு மலையாளி கவுன்சில் தேசிய வர்த்தக மாநாடு..,

BySeenu

Sep 26, 2026

வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல வர்த்தகக் குழு சார்பில், தேசிய அளவிலான எமர்ஜ் 2026 எனும் வர்த்தக மாநாடு செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுகிழமை கோவை ஓ பை தாமரா ஓட்டல் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது..

இதில் மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில்,

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளி சமூகத்தினரை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் உலக மலையாளி கவுன்சிலின் சார்பில், இந்திய அளவில் முதல்முறையாக கோவையில் இந்த தேசிய வர்த்தக மாநாடு நடத்தப்படுகிறது.
இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், நிறுவனங்களின் தலைவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இடையே புதிய தொடர்புகளை ஏற்படுத்துதல், வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குதல், முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல், அனுபவமிக்க தொழிலதிபர்களுக்கும் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கும் இடையே வழிகாட்டுதல் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவை மாநாட்டின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்..

இந்த மாநாட்டில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மாறிவரும் உலகச் சூழல், நிலையான வளர்ச்சிக்கான நிதி மற்றும் நிர்வாகம், பாரம்பரிய தொழில்களின் அடுத்தகட்ட வளர்ச்சி, போட்டி நிறைந்த சூழலில் நிறுவனங்களை புதிய பாதையில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

இளைஞர்கள் மற்றும் பெண்களை தொழில் துறையில் அதிகளவில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மலையாளி தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து நீடித்த வர்த்தக வலையமைப்பை உருவாக்கவும் மாநாடு வழிவகுக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாநாட்டின் தொடக்க விழாவில் கல்யாண் சில்க்ஸ் நிறுவனர் டி.எஸ். பட்டாபிராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கேரள உபா லோக் ஆயுக்தா நீதிபதி அசோக் மேனன், வாக்கரூ இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் . நவுஷாத், எஃப்.ஆர்.ஐ.சி.எல் தலைவர் வழக்கறிஞர் முகுந்தன், ஐ.ஐ.டி.பி–மோனாஷ் ஆராய்ச்சி அகாடமி தலைமை செயல் அதிகாரி உன்னிகிருஷ்ணன், எமரால்டு சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.