• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய்க்கு எதிராக பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

தமிழக முதலமைச்சர் வருகின்ற திங்கட்கிழமை தாய்மாமன் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமன பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகரில் தொடங்க வைக்க உள்ளார்.

இதற்காக அவர் 28ஆம் தேதி திங்கட்கிழமை மதுரை வரவுள்ள நிலையில்
மதுரை மாநகர் பகுதியில் விஜய்யை விமர்சித்து பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வர்த்தகப் பிரிவு மாநிலச் செயலாளர் KBS. சங்கர் பாண்டி என்பவர் ஒட்டியுள்ள சுவரொட்டி (Poster) அரசியல் வட்டாரத்திலும், முதலமைச்சர் விஜய் தமிழக வெற்றிக்கழக கட்சி தொண்டர்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​போஸ்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்:
​தலைப்பு: “தாலி அறுக்கும் தாய்மாமன்…”
​விஜய்க்கு எதிரான கேள்விகள்:
​”தாய்மாமன் தங்கச்சிக்கு தங்க மோதிரம் வழங்கிவிட்டு தங்கச்சியின் தாலியை அறுக்கலாமா?”
” தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே! டாஸ்மாக் மதுபானக் கூடங்களை மூடாமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தமிழக இளைஞர்களை குடிக்க வைத்து கொல்லலாமா?”
​போஸ்டர் ஒட்டியவர்: KBS. சங்கர் பாண்டி, மாநிலச் செயலாளர், வர்த்தகப் பிரிவு – பாரதிய ஜனதா கட்சி.
​பெயர் குறிப்பிட்ட விமர்சனம்: “. ஜோசப் ” என்பதைக் குறிப்பிட்டு இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
​

மதுவிலக்கு மற்றும் மனமகிழ் மன்றங்கள் மீதான குற்றச்சாட்டு: டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) என்ற பெயரில் மது விற்பனை தொடர்வது தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதாக பாஜக சார்பில் சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கு விஜய்யின் நிலப்பாடு என்ன என்ற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
​

அரசியல் சூடு: விஜய் அரசியல் கட்சித் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் மற்றும் மாற்று அரசியல் கட்சியினர் அவர் மீது வைக்கும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
​இந்த போஸ்டர் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளன.