• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் மாணவன் பலி..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவரது மகன் வித்யாதரன் வயது 16 இவர் சோழவந்தான் கீழப் பச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சோழவந்தான் அரசர் சண்முகனார் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் சென்ற போது புனித அண்ணல் மருத்துவமனை அருகில் முன்னாள் சென்ற லாரியை இருசக்கர வாகனம் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சென்று விபத்து ஏற்பட்டதில் 11ஆம் வகுப்பு மாணவன் வித்தியாதரன் சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர் இறந்த மாணவனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

காலாண்டு விடுமுறை இன்று முதல் அறிவித்துள்ள நிலையில் இறந்த மாணவன் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தானா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்றனர் பிளஸ் ஒன் மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.