• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்..,

ByKalamegam Viswanathan

Sep 26, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்கம் சார்பில் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள எம் வி எம் மருது மஹாலில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமை சோழவந்தான் அரிமா சங்கம் மற்றும் தவம் மருத்துவமனை மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. முகாமிற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்க உள்ளார். டாக்டர் அரிமா சசிகுமார் முன்னிலை வகிக்க உள்ளார். முகாமை இன்ஜினியர் அரிமா செல்ல பாண்டியன் துவக்கி வைக்க உள்ளார்.

முகாமில் ரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை நோய் எச் பி ஏ1 சி சர்க்கரை அளவு பரிசோதனை எச்பி ரத்த அளவு பெண்களுக்கான பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் கண் பரிசோதனை கண் புரை நோயாளிகள் கண்நீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய் கிட்டப் பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து போன்றவற்றிற்கு பரிசோதனைகள் போன்றவை நடைபெற உள்ளது.

மேலும் கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது. மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருதுபாண்டியன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் செய்து வருகின்றனர்.