• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு சடையாண்டிசாமி புரட்டாசி திருவிழா..,

ByP.Thangapandi

Sep 25, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழமையான சடையாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது.,

இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.,

இந்த நிலையில் இக்கோவிலில் சைவ உணவான புளியோதரை மட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக தேக்க மரத்தின் இலையில் வழங்கப்படும்.,

இந்த நிலையில் இதற்கு முன்னதாக ஆண்கள் மட்டுமே பங்கேற்று 10 அண்டாக்களில் புளியோதரை சாதம் தயாரிக்கப்பட்டு பின்பு சடையாண்டிசாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்டவைகளைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து செவ்வந்தி, மல்லிகை, ரோஸ், சம்பங்கி, எலுமிச்சை உள்ளிட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சடையாண்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.,

தொடர்ந்து குவியலாக கொட்டி வைக்கப்பட்ட புளியோதரை சாதத்திற்கு பூஜைகள் நடைபெற்று அதனை வெள்ளை வேஷ்டியில் பக்தர்கள் அள்ளிச்சென்று கோவில் வளாகம் அருகே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விமர்சையாக கொண்டாடினர்.,

இந்த பிரசாதத்தை பொதுமக்கள் வாங்கிச் சென்று வீட்டில் சாப்பிடுவதால் நோய் நொடி தீரும், உடல் ஆரோக்கியம் பெறறும் என்றும் குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு கிடைக்கும் எனவும் ஐதீகமாக உள்ளது என கூறப்படுகிறது.,

மேலும் இந்த கிராமத்தில் புரட்டாசி மாதம் தொடக்கத்திலிருந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வதாகவும் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவு உண்ணாமல் சைவ உணவை மட்டும் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.,

இதில் நக்கலப்பட்டி முத்துப்பாண்டிபட்டி, அம்பாசமுத்திரம், கிருஷ்ணாபுரம் மற்றும் வெளியூர்களிருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.,