கோவை: விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய்
இண்டர்நேஷனல் பள்ளியில் கோலாகலமாக பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளி தனது 10-ஆம் ஆண்டு பயணத்தைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு அங்கமாக , நடப்பு கல்வியாண்டில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பிராந்திய அளவில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஃபேபின் நீலங்காவில், உதவித் தாளாளர் அருட்தந்தை சச்சின் காலிங்கல் ஆகியோர் முன்னிலை வகித்து, சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.
இவ்விழாவில் பள்ளி முதல்வர் திருமதி. கேரென் அகஸ்டின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளி ICSE போர்டின் விதிமுறைகளை பின்பற்றி தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதோடு, விளையாட்டுத் துறைக்கும் , கலைகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க ஸ்கேட்டிங் (Skating), கராத்தே (Karate), ஆர்ச்சரி (Archery), கபடி (Kabaddi) கூடைப்பந்து ( basket ball) நடனம் (Dance) இசை (Music) கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல்(Art & Craft) போன்ற துறைகளுக்குச் சிறப்புப் பயிற்சியாளர்களை (Special Coaches) நியமித்துத் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கி வருகிறோம் என்றார்.

அதன் விளைவாக, நமது பள்ளி மாணவர்கள் மண்டல (Zonal), பிராந்திய (Regional) மற்றும் தேசிய அளவிலான (National Level) பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாதனைகளைப் படைத்து வருகின்றனர். வரும் காலங்களிலும் நமது பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டு துறைகளிலும் பன்முகத்
தன்மையோடு ஒளிரும்” எனத் தனது உரையில் கூறினார்.




