மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல் நிலையம் அருகே வள்ளியம்மாள் என்ற சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.,

இவர் சிலவருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் அழுக்குத் துணியுடன் சாலையில் தூங்கி வருவதாக கூறப்படுகிறது.,

எழுமலை காவல்துறையின் அளித்த தகவலின் அடிப்படையில் சமூக ஆர்வலரும் எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தின் மருந்தாளரான ரஞ்சித்குமார் மற்றும் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தா, எழுமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி மற்றும் காவலர்கள் மூதாட்டியை மீட்டனர்.,
பின்னர் அவருக்கு முடிவெட்டி, குளிக்க வைத்து மாற்று உடைகள் அணிவித்தனர்.,
தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தேனி அரசு மருத்துவ கல்லூரியின் கீழ்இயங்கி வரும் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.,
இதனால் இந்த மனிதநேயத்திற்கு காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.,




