• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

ByK Kaliraj

Sep 22, 2026

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் 21.09.2026 அன்று சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் (WeGrow Skill Campus Pvt. Ltd.) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்துயிடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் தொடக்கமாக, இளங்கலை முதலாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி எஸ்.சந்திரமதி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர்தம் உரையில், கல்லூரி-தொழில் நிறுவனங்களுக்கிடையிலான இத்தகைய ஒப்பந்தங்கள் மாணவர்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன எனக் குறிப்பிட்டார். மாணவர்கள் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கல்லூரித் துணை முதல்வர் செல்வி இரா.முத்துலட்சுமி மற்றும் துறைத்தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். அவர்கள் தங்களது வாழ்த்துரையில், மாணவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தங்களது தொழில்முறைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மேலும், நடைமுறை அறிவு, தொழில்நுட்ப அனுபவம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ள இத்தகைய ஒப்பந்தங்கள் உதவும் எனத் தெரிவித்தனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினரும், நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான முனைவர் T.தவபாலன் அவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சி வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிட்டனர். நிறைவாக, இளங்கலை முதலாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை மாணவி ஆர்.கௌசல்யா நன்றினார்.