• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா..,

BySeenu

Sep 22, 2026

கோவை வேலந்தாவளம் சாலையில் அமைந்துள்ள தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா நடைபெற்றது.

நிகழ்வில் ‘நிலா’ எனப் பெயரிடப்பட்ட மனித உருவ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் புதுமுக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது ட்ரோன்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் வரவேற்புரையாற்றிய கல்லூரி இயக்குநர் டாக்டர் அருள் குழந்தைவேல், பொறியியல் கல்வியில் அறிவைப் பெறுவதோடு, குழுவாக இணைந்து செயல்படும் திறன், தொடர்ந்து புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்லூரியில் கிடைக்கும் நான்கு ஆண்டு கால வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பொறியியல் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் இருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுமார் 300 மாணவர்கள் NPTEL சான்றிதழ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறினார்.

விழாவின் ஒரு பகுதியாக முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்ற பலூன் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் தங்களது இலக்குகளை பலூன்களில் எழுதி அவற்றை வானில் பறக்கவிட்டனர்.