• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் பதட்டம் ராம்சரண்,ராஜமவுலி ஜாலி

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடன இயக்குனர் சாண்டி குழுவினரின் நடன நிகழ்வும், இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இசைக் குழுவினரின் இசைக் கருவிகளை மேடையில் பொருத்தும் நேரத்தை சரி செய்யும் நோக்கில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர்.

அப்போது சென்னைத் தமிழில் சில வார்த்தைகளைச் சொல்லுங்கள் என தொகுப்பாளர் விஜய் கேட்டார். அப்போது ‘டான்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜலபுலஜங்கு’ என்ற பாடல் வரிகளை ஜுனியர் என்டிஆரையும், ராம்சரணையும் சொல்ல வைத்தார். அது ‘டான்’ படத்தின் பாடல் எனத் தெரியாமல் அவர்கள் இருவரும் சொல்லிக்காட்டினர்.

‘ஆர்ஆர்ஆர்’ விழாவில் நம் படத்தை இப்படி புரமோஷன் செய்கிறார்களே எனப் பதறிய சிவகார்த்திகேயன் உடனடியாக, “இந்த லிரிக்ஸ் அவங்க சொல்ல சொன்னதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை சார், ‘கேப்’ல நான் புரமோஷன் பண்ணிடக் கூடாது சார்,” என சமாளித்தார். அடுத்து, “அந்தப் பாட்டுல ‘தக் லைப்ல கிங்’னு ஒரு வார்த்தை இருக்குல்லயா, அது ஜுனியர் என்டிஆர் சாருக்குப் பொருத்தமாக இருக்கும். அது எனக்கு எழுதினால் ஜாலி லிரிக்ஸ், என்டிஆர் சாருக்கு எழுதினா மாஸ் லிரிக்ஸ்,” என அவருக்கும் ஐஸ் வைத்து சமாளித்தார்.
இதனை ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் அதை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்கள்.