• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சங்கங் கோட்டையில் உள்ள பெண்கள் கழிப்பறை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 20, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதாவது 6வது வார்டு சங்கங்கோட்டை கோட்டை பகுதி மக்களுக்காக கட்டப்பட்டுள்ள பெண்கள் கழிப்பறை கடத்த சில நாட்களாக முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கழிப்பறையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கழிப்பறை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் அருகில் குடியிருக்கும் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். பேரூராட்சி பெண் அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக கழிப்பறையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த கழிப்பறையானது தற்போது பயன்பாடு குறைவாக இருப்பதாக கூறும் பொதுமக்கள் அருகில் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கழிப்பறை இருப்பதால் சங்கங்கோட்டையில் உள்ள கழிப்பறையை எடுத்துவிட்டு இந்த பகுதி பொதுமக்களுக்கு ரேசன் கடை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏற்கனவே பேட்டை பகுதியில் ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சோழவந்தனின் மற்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள வேலையில் சங்கங் கோட்டையிலும் ரேஷன் கடை இல்லாத நிலை உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் குறைந்த அளவு பயன்பாட்டில் உள்ள பெண்கள் கழிப்பறையை அகற்றிவிட்டு ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.