• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மக்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன் – நடிகர் சூரி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

பிரபல நகைச்சுவை நடிகரான சூரி சமீப காலமாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார் அவர் அண்மையில் ஹீரோவாக நடித்து வெளிவந்த மண்டாடி திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது தொடர்ந்து மண்டாடி திரையிடப்பட்டுள்ளதிரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை ரிச்சி திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மண்டாடி திரைப்படத்தை தனது குழுவினர்களுடன் சென்று பார்க்க உள்ளார் இதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த நடிகர் சூரிக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி மண்டாடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா தெலுங்கானாவிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் நாளை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு சென்று மண்டாடி திரைப்படத்தை பார்க்க உள்ளதாகவும் அப்போது அப்பகுதி மீனவர்களின் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்

மண்டாடி திரைப்படம் மீனவர் சமுதாயத்தினருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றார்

படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சூரி ஹீரோவாக மட்டும் நடிப்பாரா என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லுங்கள் நான் எவ்வாறு நடிக்க வேண்டும் என செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசியவர் நான் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க மக்கள் ஆதரவுதான் காரணம் என்றார்.மக்கள் சூரியை அவர்களில் ஒருவராக பார்க்கிறார்கள் என்றார்.

மண்டாடி திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்து விட்டதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு? மண்டாடி படம் 100 கோடியை தொட்டுவிட்டது இது தொடர்பாக நாளை அறிவிப்பு வரும்.
தல – தளபதி லண்டனில் சந்தித்தது குறித்த கேள்விக்கு?

தல – தளபதி இருவரும் நண்பர்கள் தான் எங்கு சந்தித்தாலும் சந்தோஷம் தான் என்றார்