• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு..,

ByKalamegam Viswanathan

Sep 19, 2026

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Combined Technical Services Exam – Non-Interview) தேர்வு இன்று (19.09.2026) முற்பகல் நடைபெற்றது.

இத்தேர்வினை முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தேர்வர்களுக்கான இருக்கை வசதிகள், தேர்வு அறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் இத்தேர்விற்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 25 இடங்களில் தேர்வுக் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இத்தேர்வினை எழுத மொத்தம் 7,142 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 4,103 நபர்கள் (57%) நேரில் வருகை புரிந்து தேர்வெழுதினர். 3,039 நபர்கள் (43%) தேர்விற்கு வருகை தரவில்லை.

தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி அமைதியான முறையில் தேர்வெழுதுவதை உறுதி செய்யும் வகையில் முறையான வினாத்தாள் பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் தேர்வு மையங்களில் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

இந்த ஆய்வின் போது, மதுரை வடக்கு வட்டாட்சியர் திரு. கமலேஷ் அவர்கள் உட்பட தொடர்புடைய துறை அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.