தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கோவையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
கடந்த 15.09.2026 அன்று மாலை 6 மணிக்கு வீட்டிற்கு சென்ற விக்னேஷ் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த சின்னமனூர் போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேஷ் இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் சின்னமனூர் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் சார்பு ஆய்வாளர் முஜிபுர் ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு வந்து உரியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



