• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்..,

BySeenu

Sep 17, 2026

இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் 29-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் கோவை பீளமேடு பகுதியில் விமரிசையாக நடைபெற்றது.
பீளமேடு பிளேக் மாரியம்மன் கோவில் பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலைமை விநாயகருக்கு, அதிகாலை கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கியது.

தொடர்ந்து காலை, மாலை சிறப்பு பூஜைகளும் அன்னதானம் நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்வான விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை மசக்காளியாளையம் தன்ராஜ் திடலில் இருந்து தொடங்கி சிங்காநல்லூர் குளக்கரை வரை நடைபெற்றது.
விஜர்சன ஊர்வலத்தை, பாலாஜி உத்தம ராமசாமி தொடங்கி வைத்தார். ஜமாப் அடித்து, தொண்டர்கள் உற்சாக நடனமாடி விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து சென்றனர்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில், மாநில செயலாளர் கே.ஆர். சங்கர், மாநில துணைச் செயலாளர் முருகன், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் , மாவட்ட பொதுச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.