• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அய்யன் பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் விழுந்ததில் பட்டாசுகள் வெடித்து சேதம்..,

ByK Kaliraj

Sep 16, 2026

சிவகாசியைச் சேர்ந்த அபிரூபன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற அய்யன் பட்டாசு தொழிற்சாலை செவல்பட்டியில் இயங்கி வருகிறது. இன்று இரவு இடியுடன் பெய்த மழை காரணமாக மின்னல் பட்டாசு சாலையில் விழுந்ததில் அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

மேலும் அருகில் இருந்த கலவை எந்திரம் தீயில் சேதம் அடைந்தது தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உடனடியாக தீயணைத்தனர்.

இரவு நேரம் விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.