• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஐஸ் கட்டியில் ஐந்தரை நிமிடம் பரதநாட்டியம் ஆடி அசத்தல்..,

ByS. SRIDHAR

Sep 15, 2026

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ராதா தம்பதியினருக்கு தீபக் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் சாய் திவ்யா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தீபக் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து எட்டு மணி நேரம் ட்ரம்செட் வாசித்து நோபல் ரெகார்டு உலக சாதனையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து இவர்களது மகளான இரண்டாம் வகுப்பு படிக்கும் சாய் திவ்யா கடந்த ஒரு ஆண்டாக பரதநாட்டிய வகுப்பு சென்று வரக்கூடிய நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடிப் பயிற்சி மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாணவி சாய் திவ்யா ஐஸ் கட்டியில் ஐந்தரை நிமிடம் பரதநாட்டியம் ஆடி அசத்தி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர் மாணவி சாதனை படைத்ததற்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

மேலும் இதில் நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் பிருந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவியின் அசாத்திய சாதனையை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

மேலும் மாணவி வரக்கூடிய காலங்களில் இதைவிட அதிக சாதனை படைக்க ஆர்வமாக இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருந்த பரதநாட்டிய மாஸ்டர் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் வீட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.