திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்ததால் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்படைந்து வந்தனர்.

மேலும் இரவு நேரத்திலும் குளிந்த காற்று இல்லாமல் வெப்ப காற்றை வீசி வந்த நிலையில் இன்று பகல் 3 மணிக்கு மேல் வானம் இருள் சூழ்ந்து இருந்தது. சுமார் 5 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து துவங்கியது.
இடியுடன் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி, தாடிக்கொம்பு ,சின்னாளப்பட்டி, ஆத்தூர் ,புங்கம்பாடி ,இடையகோட்டை, கீரனூர், பழனி உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலாக இடியுடன் கனமழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக செய்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும். திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெப்ப அலை வீசி வந்த நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கனமழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி பொதுமக்கள், விவசாயிகள் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.









