தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் வருகிற 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து சின்னமனூர் கண்ணாடி கடை முக்கிய விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சின்னமனூர் நகர இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அருகில் ஆசான் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் மாவீரன் பூலித்தேவன் இலவச சிலம்ப பயிற்சி பள்ளி சார்பாக சிலம்ப விளையாட்டு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மலேசியாவில் சர்வதேச ‘டத்தோ’ விருது பெற்ற தமிழர், சிலம்பக் கலையின் மகா குரு டத்தோ சிவகுமார் ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டார்.
உலக அளவில் தமிழரின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை கொண்டு சேர்த்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் டத்தோ சிவகுமார். அவரது சேவையை பாராட்டி மலேசிய அரசு ‘டத்தோ’ எனும் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழர் பாரம்பரியத்தை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த அவரை, சின்னமனூர் நகர இந்து முன்னணி மற்றும் பூலித்தேவன் இலவச சிலம்ப பள்ளி சார்பாக வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விழாவில் சிலம்ப பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை சிலம்ப ஆசான் இந்து முன்னணி நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.








