• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக பாக்ட் உர நிறுவனம் அர்ப்பணிப்பு..,

ByKalamegam Viswanathan

Sep 12, 2026
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாக்ட் உர நிறுவனம் சார்பில், ரூபாய் 3 லட்சம் மதிப்புடைய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 10 வீல் சேர்கள் உள்ளிட்டவை அர்ப்பணிக்கப்பட்டன.             


இந்நிறுவனம் தொடர்ந்து, இதுபோன்ற அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடத்திற்குள் ரூபாய் 50 லட்சம் பெறுமானமுள்ள மருத்துவ உபகரணங்களை தமிழகமெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்நிறுவன மேலாண்மை இயக்குனர் சக்தி மணி தெரிவித்தார்.
  


மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்த பாக்ட் உர நிறுவன அதிகாரிகளுக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர்