• Sat. Oct 31st, 2026

செப்.17ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி செப்.17ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

இதை ஈடு செய்ய செப்.26ம் தேதி (சனி) பணிநாளாகச் செயல்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.