சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலிக்குடங்களுடன் சிவகாசி- கன்னிசேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.









