விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவா கொண்டாடப்பட்ட.து. விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் ராஜு, பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவானது பள்ளி முதல்வர் உயர்திரு அருண்குமார் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்திருந்தனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவின் சிறப்பு அம்சமாக உறியடித்தல் நிகழ்வானது நடைபெற்றது.









