• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல்..,

BySeenu

Sep 3, 2026

கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவில் இருந்து 10″பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளனர்.

அங்கு சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது கோவையில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான கோவை மாவட்ட நவக்கரை அருகே அந்த வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர்.

அப்பொழுது சுற்றுலாவினர்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அரிவாளால் தாக்கியதில் சுற்றுலாப் பயணிகளையும் வாகனத்தையும் தாக்கி உள்ளனர்.

இதில் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்பிய நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்று மிரட்டி உள்ளார்.

அப்பொழுது துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதனால் ஓட்டுனர் அச்சமடைந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம் சாலையோரம் மோதி நின்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்களும் ஓடி வந்ததால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பியுள்ளனர்.

இது குறித்து மதுக்கரை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுற்றுலா வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் மேலும் காயமடைந்த இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.