மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மாணியமாக வழங்க உள்ளதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது.,

இதனை அறிந்த உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,

இந்நிலையில் 18 முதல் 45 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே இந்த மாணியம் கிடைக்கும் என்றும், விதவை உதவி தொகை பெறுவோருக்கு மாணியம் கிடைக்காது என சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தது பெண்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.,
அனைத்து விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களும் உதவி தொகை பெறும் சூழலில், விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும், முறையான அறிவிப்பு இன்றி அன்றாட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும், ஆதரவற்ற பெண்களை அலைக்கழிப்பு செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.,




