• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை..,

ByP.Thangapandi

Sep 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் முதல் எழுமலை வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.,

இந்த சாலை வழியாக காமாட்சிபுரம், சுப்புலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.,

இப்பகுதி மக்கள் அவசர தேவைக்காகவும், மருத்துவமனைக்கும், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.,

மேலும் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாலை சீரமைக்கப்படாமலும் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.,

மேலும் இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் அவசர தேவைக்கு செல்லும் போது பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்பட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.,

அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,