• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் உள்ள பி.எஸ் முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் & அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியானது உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மாவட்டச் செயலாளரும் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பக் கலைக்கூடம் மற்றும் அகாடமியின் ஆசானமான ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் சுதாகர் கலந்து கொண்டார் துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்புத்தூர் மதுரை திருப்பூர் என சுமார் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து நான்கு வயதில் முதல் 14 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

நடுவர்கள் வைத்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற போட்டியானது வயது வாரியாக மாணவ மாணவியர்களுக்கு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது அதேபோல் ஆட்டநாயகன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பி.எஸ். முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி உரிமையாளர் முத்து கல்வன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.