• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மாணவர் விடுதியில் மரக்கன்று நடும் விழா..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

மதுரை, ரேஸ் கோர்ஸ்,தாமரை தொட்டி அருகில் அரசு மாணவர் விடுதி வளாகம் சுற்றி மாணவ தன்னார்வல இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் ஆசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது..

இந்நிகழ்விற்கு விடுதி காப்பாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜமாலுதீன் முன்னிலை வகித்தார். ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் தங்கமணி கலந்து கொண்டு சுற்றுச்சூழலின் சிறப்பினை குறித்தும் கல்வி மேம்பாடு பற்றியும்,, தனிமனித ஒழுக்கம் சமுதாயத்தின் முன்னேற்றம் என்றும் ,பசுமை வளம்,இயற்கையை காப்பதில் மாணவர்கள் செய்ய வேண்டிய கடமையையும்,நாம் எதிர்கால சந்ததியினர் சிறந்ததொரு சுற்று சூழல் அமைத்து தரவேண்டிய கடமை எடுத்துரைத்து அரசு மானவர் விடுதி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் வளாகம் சுற்றி 50 மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் அன்பு மற்றும் முன்னாள் மாணவர்களும், விடுதி மாணவர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக இயற்கையின் பசுமை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. மாணவ ஒருங்கிணைப்பாளர் மாணவர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.