• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டை தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லையா?-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடை இருந்த பொழுது இரண்டு வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களின் போராட்டத்தை மதிப்பளித்து உடனடியாக அந்த தடையை நீக்கியது.-

ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜல்லிக்கட்டு போட்டியை எந்த முதலமைச்சரும் கொடியசைத்து துவக்கிவைக்கவில்லை. ஆனால் எடப்பாடியார் ஒருவர்தான் அலங்காநல்லூர் வாடிவாசலை திறந்து வைத்து பச்சைக் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் முதன் முதலாக கார்களை பரிசாக வழங்கியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும் .

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருப்பையா, ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என்ற கருத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்திருப்பது இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜென்சி தலைமுறையால் தான் தவெகஅரசு வந்தது என்று பெருமை பேசி வந்தது. ஆனால் இன்றைக்கு அந்த இளைஞர்களை கொச்சைப்படுத்தி உள்ளது. இது முகம் சுளிக்கும், அருவருதக்க உள்ளது. இதற்காக எடப்பாடியார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கும் ஜல்லிக்கட்டுக்கும் நெருங்கி பந்தம் உள்ளது ,நெருங்கிய தொடர்பு உள்ளது‌ ஏனென்றால் ஜல்லிக்கட்டு சுதந்திரத்தை உரிமையை பெற்று தந்தது
அதிமுகவாகும்.

பரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு தொடர்பாக கருப்பையா பேசியது திட்டமிட்ட சூழ்ச்சியாக உள்ளது என சர்சையுடன் தமிழக முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இது ஆணவத்தின் உச்சம். மன்னிப்பு கேட்டால் போதுமா? வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகடுவார்கள் மன்னிப்பு கேட்டு தப்பிக்க முடியாது.

கருப்பையா திட்டமிட்டு பேசினாரா? முதலமைச்சர் விஜய் சொல்லி பேசினாரா? ஒப்புதல் பெற்று பேசினாரா? தமிழக வெற்றி கழகம் ஜல்லிக்கட்டை விரும்பவில்லையா?

இளைஞர்களின் வீரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது அநாகரிகத்தின் உச்சம் .சட்டப்பேரவை நேரலை காட்சிகள் உலகம் முழுவதும் சென்றுள்ள நிலையில், அந்த வீடியோ நீக்கப்படுமா என்பதை சட்டப்பேரவை தலைவர் தெளிவுபடுத்த வேண்டும்.

நிர்மல்குமார் என்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்புபவர் என பேசியிருப்பது மிகப்பெரிய நகைச்சுவையாகும், அரசியல் முட்டாள் தனமாகும் அவருக்கு அறிவு மழுங்கிப் போய்விட்டது.

சோதனையான நேரங்களில் எடப்பாடியாரின் வழியில் நிற்கிறோம் நீங்கள் ஆஃபர் கொடுத்தாலும் அதற்கு எந்த சலனம் என்னிடம் இலலை. இன்றைக்கு பல்வேறு சவால்களை தகர்த்து எரிந்து இயக்கத்திற்காக பல்வேறு தியாகம் செய்த
எடப்பாடியாரை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவோம்

அமைச்சர் நிர்மல்குமார் அவதூறு பிரச்சாரங்களை அள்ளி தெளிக்க வேண்டாம் இன்றைக்கு நீங்கள் தென் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உள்ளீர்கள்

முதலமைச்சர் விஜய்யை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதலமைச்சராக வருவாரா என்று நிர்மல்குமாரை கேட்டால் அது எப்படி நகைச்சுவையாக இருக்குமோ, அதுபோலத்தான் என்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்புகிறார் என்று அவர் கூறுவது.

ஐந்து கட்சிகளை தாண்டி இன்றைக்கு விஜய் கட்சியில் சேர்ந்து உள்ளீர்கள், விஜய் கட்சி ஆட்சியிலிருந்து போய்விட்டால் நீங்கள் எந்த கட்சிக்கு போவீர்கள் .அதிகாரம் உள்ள கட்சியில் தான் நீங்கள் சேர்ந்தீர்கள் என்பது கடந்த கால வரலாறு.

நான் கிளைச் செயலாளர் மகன் அதிமுக மாணவர் அணி முதல் இளைஞரணி, அம்மா பேரவை நிர்வாகி, அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என படிப்படியாக வளர்ந்தேன்.ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே கட்சி. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் மறுவடிவமாக எடப்பாடியாரை கருதி தான் கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

இறுதியாக, ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கருப்பையா தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அனுமதியை பெற்று போராட்டம் நடத்துவோம் என கூறினார்.