சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்ததற்கு பதிலாக கடந்த தி.மு.க. அரசு அந்த நிதியை அலங்காநல்லூர் தேசியகூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பதற்கு பயன்படுத்தி இருக்கலாம். அதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், 5 மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வாழ்வாதாரமும் கிடைத்திருக்கும்.
சோழவந்தான் தொகுதியின் நீண்ட நாள் நிறைவேற்றப்படாத பின்வரும் கோரிக்கைகள் வருமாறு:-
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.பாலமேடு சாத்தையாறு அணையி னை தூர்வாரி சீமை கருவேல் முட்க ளை அகற்றி, கரைகளை உயர்த்தி பெரியாறு பாசன கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வாடிப்பட்டியில்மாவட்ட துணை நீதிமன்றம் அமைக்க வேண்டும். அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும்.
பாலமேடு பகுதியில்சுவை மிகுந்த மா, கொய்யாபழங்களின் விளைச்சலை கருத்தில் கொண்டுபதப்படுத்தி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்போது வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் சுமார் 4 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டு சுமார் ௹. 2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கட்டிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்தப் பணி இதுவரை நடைபெறவில்லை. பல்வேறு காரணங்களால் தடைபட்டு போனது தொடர்ந்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவே தனித்துவத்தோடு தனக்கு ஒரு முத்திரை பதித்துஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர்சோழவந்தான் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.




