விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கான மகளிர் சுகாதார வளாகம் அமைந்துள்ளது.

கரிசல்பட்டி,இ.எல். ரெட்டியபட்டி, முத்தாண்டியாபுரம் , சங்கரபாண்டியாபுரம் சத்திரம், குகன்பாறை, உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, செல்வதற்கும் வந்து செல்கின்றனர். இயற்கை உபாதை கழிக்க சுகாதார வளாகம் மூடியே கிடப்பதால் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மோடி கிடைக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




