விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் அமைந்துள்ள ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா பள்ளியின் செயலார் ராகவன் தலைமையில் சேர்மன் பிருந்தா ராகவன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மோகன்திலக் மற்றும் ஆதிமூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் கலந்துரையாடினார்கள்
மேலும் மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் மோதிலால் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் அனைத்து துறை சார்பாக 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு 2021-2025 வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதோடு மாணவ மாணவியரோடு சேர்ந்து பெற்றோர்களும் பேராசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டார்கள்.




