• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா..,

ByK Kaliraj

Aug 29, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடார் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி, நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி 122 வது ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகாசி பிரபல டாக்டர் சந்திர கிரகம் குடும்பத்தின் சார்பில் ராஜ கிரகம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ராஜ கிரகம், சென்னைவாழ் தாயில்பட்டி நாடார் உறவின்முறை நிர்வாகிகளும் வழங்கினார்கள்.

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியைகள், கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி நாடார் ஜார்ஜ் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் பள்ளி கமிட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைமை ஆசிரியர் ரத்தினகுமார் நன்றி கூறினார்