• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி தொடக்கம்..,

BySeenu

Aug 29, 2026

கோவை, ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில், இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் தொடங்கியது. இப்போட்டி, கோவை வெள்ளானைப்பட்டி அருகே மோளபாளையத்தில் உள்ள ஈக்வைன் ட்ரீம்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டியை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி, எக்ஸ்போவான் நிறுவனர் டாக்டர் ஆர். மகேந்திரன், இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சில் வர்த்தக தூதர் டாக்டர் ஆர்.சி.எம். விஷ்ணு பிரபு மற்றும் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், மொத்தம் 54 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, குதிரையேற்ற வீரர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் தங்களது திறமைகளையும் சாகசங்களையும் செய்து காட்டினர்.

இதுகுறித்து ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் ஏ.எஸ். சக்தி பாலாஜி கூறுகையில், குதிரை தடை தாண்டும் போட்டிகள் 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றன. வீரர்களின் செயல்பாடுகளை, புது தில்லியைச் சேர்ந்த இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். போட்டிக்கான பாதையை ஷார்ஜாவைச் சேர்ந்த போட்டிப் பாதை வடிவமைப்பாளர் வடிவமைத்துள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.