• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக உண்டு உறைவிடப்பள்ளியில் விழா..,

ByK Kaliraj

Aug 27, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக ரொம்ப கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி, ( Extension Activity) நடத்தப்பட்டது.

முதுகலை வரலாற்றுத் துறையில் இருந்து 21 மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் தொடக்கமாக உண்டு உறைவிடப்பள்ளி நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். தொடக்க உரை பத்மபிரியா முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு மாணவியால் வழங்கப்பட்டது. வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி வினாடி வினா , தொடர்பு விளையாட்டு போட்டிகள் அப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

வரலாறு படிப்பதினால் என்ன நன்மைகள் என்பது பற்றி நித்யா முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று மாணவி சிறப்புரை வழங்கினார். அப்பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் நிறைவாக நன்றி உரை முனைவர் இரா. கலைவாணி வரலாற்று துறை பேராசிரியை அவர்களால் வழங்கப்பட்டது

அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிற்றுண்டியும் மதிய உணவும் என் கல்லூரி மாணவிகளால் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் நீலா, புஷ்பம், கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.