• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முதியோர்கள் செல்ல முடியாமல் அவதி..,

ByKalamegam Viswanathan

Aug 27, 2026

மதுரை மாவட்டம் திருநகரில் பாதாள சாக்கடைக்காக சாலையின் நடுவில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தோண்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணி நிறைவு பெற்ற பின், சாலையை முழுமையாக சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டு சென்றதால், குண்டும் குழியுமாகவும் கற்கள் பெயர்ந்தும் காணப்படுவதால் ,

இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் மாணவ, மாணவிகள், முதியோர்கள் சாலையில் நடப்பதற்கு பெரும் அவதிக்கு ஆளாவதுடன், விபத்துகளும் நிகழ்கிறது.
இதனால் பாதாள சாக்கடை பணி முடிவுற்ற நிலையிலும், சாலையை முழுமையாக சீரமைக்க கூறி குடியிருப்பு வாசிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.